திருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
 
தேசிய தலைவர்கள் அன்று இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட்டமையால்  எமது தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது.கிழக்கு மாகாணம் பல துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.எனவே அடுத்த தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு முன் கிழக்கு மாகாணத்தை சகல துறைசார் விஷயங்களிலும் அபிவிருத்தியை அடைய 
செய்ய தாம் முழுமையாக அர்ப்பணித்து செயற்படுவது தமது நோக்கமாக இருப்பதாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
 
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள்,கிழக்கு மாகாண பிரதம செயலாளர்டி.எம்.எஸ்.அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,அரச அதிகாரிகள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்