செய்தி மற்றும் நிகழ்வுகள்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (10.06.2019) காலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமாரவின் வரவேற்புரையுடன் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இவ்வாண்டு நடை முறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம்,

எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.