2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
 
கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் இற்றைவரை 66 சமூக நிர்வாக கிராமங்களும் 33 வறுமை ஒழிப்பு கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார். அதேபோல்    கம்பெரலிய வேலைத்திட்டத்திட்டத்தின் கீழ் 1163 வேலைத்திட்டதிட்டங்களுக்காக 846 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்நிதி பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 
 
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்,போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்,சிறு நீரக நோய் தொடர்பான வேலைத்திட்டம்,மாவட்ட சமூக பொருளாதார பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டன.
 
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே,கே.துரைரட்ணசிங்கம்,அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள்,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
 
தேசிய தலைவர்கள் அன்று இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட்டமையால்  எமது தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது.கிழக்கு மாகாணம் பல துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.எனவே அடுத்த தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு முன் கிழக்கு மாகாணத்தை சகல துறைசார் விஷயங்களிலும் அபிவிருத்தியை அடைய 
செய்ய தாம் முழுமையாக அர்ப்பணித்து செயற்படுவது தமது நோக்கமாக இருப்பதாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
 
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள்,கிழக்கு மாகாண பிரதம செயலாளர்டி.எம்.எஸ்.அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,அரச அதிகாரிகள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்