செய்தி மற்றும் நிகழ்வுகள்

எமது நோக்கு

வினைத்திறனும் விளைத்திறனும் கூடிய போதுச்சேவையினுடாக திருகோணமலை மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துதல்.

எங்கள் நோக்கம்

சரியான திட்டமிடல் மற்றும் வள ஈடுபத்தல் ஊடாக அரசின் கொள்கைகளுக்கு இணங்க வினைத்திறனுடனும் நடுநிலமையுடனும் நியாயபூர்வமான சினேக மனப்பாங்குடன் திருகோணமலை மாவட்ட மக்களது தேவைகளை நிறைவேற்றுதல்.

திருகோணமலை மாவட்டம்.

திருகோணமலை பிரதேசமானது இயற்கைத் துறைமுகத்துடன் இராணுவ வியாபார மற்றும் புராண வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட இயற்கையான அழகுக்காட்சிகளுடன் இலங்கையின் கிழக்குக்கரையில் அமைந்த நகரமாகும். திருகோணமலை மாவட்டம் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தினாலும் மேற்கில் அனுராதபுரம் பொலன்நறுவை மாவட்டங்களினாலும் தெற்கில் மட்டக்களப்பு மாவட்டத்தினாலும் கிழக்கு கடற்கரைப்பிரதேசத்தாலும் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.

 

விவசாயமும் மீன்பிடித்தொழிலும் பிரதேச மக்களின் பிரதான பொருளாதார உபாய மார்க்கங்களாகும். இதற்கு மேலதிகமாக சிறுகைத்தொழிலும் வியாபாரமும் வருமானம் தேடும் பிரதான மார்க்கங்களாக உள்ளன. பிறிமா மற்றும் மிட்சியு போன்ற அனைத்துலக உற்பத்தி நிறுவனங்கள் தமது உற்பத்திகளை விநியோகிக்கும் கேந்திர நிலையமாக திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன் படுத்துவதால் வருமானம் பலவழிகளிலும் கிடைக்கின்றது. சுற்றுலாத்துறையும் இப் பிரதேசத்தின் முக்கிய வருமானத்துறையாக அமைந்துள்ளது.

 

ஐம்பது கிலோ மீற்றர் தூரத்திற்குப் பரந்துள்ள திருகோணமலைத் துறைமுகம் உலகத்தின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாகும். மூன்று பக்கங்களில் மலைகளையும் மறு பக்கத்தில் சிறு தீவுகள் சிலவற்றையும் கொண்டுள்ளது. உலகத்தின் ஐந்தாவது பெரிய இயற்கைத் துறைமுகமான இது உலகத்தின் சிறந்த துறைமுகமென 'வாட் நெல்சன்' அவர்கள் குறிப்பிடடுள்ளார்.

 

நீண்ட நிலாவெளி கடற்கரையில் அமைந்துள்ள “புறாமலை” தீவு மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கைக் காட்சியாகும். கடலினுள் அமைந்துள்ள கடல்படுதிரவியங்கள்பல்வகை நிற மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பதற்காக உல்லாசப்பயணிகள் எப்போதும் இவ்விடத்தில் கூடுகின்றனர்.

 

பிறட்ரிக் கோட்டையின் வடக்குமூலையில் 360 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையானது சுவாமி மலையெனப் பிரசித்தி பெற்றுள்ளது. அதன் முற்றத்தில் திருக்கோணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபக்தனான இராவணன் என்னும் அரசனால் இக்கோயில் கட்டப்பட்டதாகும். மிகப் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரமும் மேலும் பல இந்துத்திருத்தலங்களும் இம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. வரலாற்றுப்பிரசித்திபெற்ற பௌத்த தலங்களான திரியாய் விகாரை சேருவில விகாரை வெல்கம் விகாரை என்பனவும் அமைந்துள்ளன. இதேபோன்று கிண்ணியா முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ புனிதத்தலங்கள் பலவும் இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

பல தட்ப வெப்ப நிலைகளைக் கொண்ட ஏழு வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் கன்னியாப் பிரதேசத்தில் ஒருங்கே அமைந்துள்ளன. இக் கிணற்றுநீர் நோய் தீர்க்கும் மருந்தாக இங்கு வாழும் மக்களினால் நம்பப்படுகின்றது.

 

திருகோணமலை மாவட்டம் தமிழ், சிங்கள,முஸ்லீம், பறங்கியர்; ஆகிய நான்கு இன மக்களும் சமாதானமாக வாழும் அமைதிப் பிரதேசமென்பதற்கு வரலாறு உள்ளது. இந்நகரம் விடுமுறையைக் கழிப்பதற்கான இடமாக மட்டுமல்லாது பல்வேறு துறைகளையும் கொண்ட நகரமாகவும் உள்ளது. இயற்கையாக இங்கு அமைந்துள்ள இயற்கைத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இங்கு உள்ள பொருளாதார மற்றும் இராணுவமய செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இற்றைவரை உள்ளதைப்போல் எதிர்காலத்திலும் இம் மாவட்டம் இலங்கையின் கவரச்சிகரமான பிரதேசமாக அமைந்திருக்கும்.